[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

"மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்"- வானிலை ஆய்வு மையம்

fishermen-do-not-go-to-sea-meteorological-center

அடுத்த 24 மணி ‌நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ‌

 தென்மேற்கு திசையில் இருந்து 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் தென் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் ‌4.3 மீட்டர் உயரம் வரை எழுப்பக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், பல பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராக உள்ளனர். சில இடங்களில் எச்சரிக்கையையும் மீறி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close