[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

“காவல்துறையின் அராஜக போக்கினை கண்டிக்கிறோம்” - ஸ்டாலின்

mk-stalin-condemn-gun-fire-on-sterlite-protester

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஸ்டெர்லைட் பிரச்னையில் நீண்ட நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், அரசுப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாததே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம். காவல்துறையினரின் அராஜ போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். துப்பாக்கிச் சூடு சம்பவம் வேதனை அளிக்கிறது. செயலற்ற நிலையில் இருக்கும் அரசை திமுக வன்மையாக கண்டிக்கிறது” என்றார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் உயிரை துச்சமாக நினைத்து ஆலை நிர்வாகத்திற்கு அரசு உதவ துடிப்பது ஏன்?” என்று கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close