கார்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் முகத்தில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரசை விமர்சித்து கார்டூனிஸ்ட் பாலா கேலிச்சித்திரம் ஒன்றினை தனது முகநூல் பதிவில் வெளியிட்டார். இந்த கேலி சித்திரம் முதலமைச்சர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறை டிஎஸ்பி ஆகியோரை விமர்சிக்கும் வகையில் இருந்தது.கந்துவட்டி தொடர்பாக கேலிச் சித்திரம் வெளியிட்டதற்காக கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பாலா கைதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அவர் வெளியிட்ட கேலிச் சித்திரம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டது. இதனையடுத்து அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி பாலா மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது திருவல்லிக்கேனி போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், பாலா மற்றும் பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் மீது வழக்குத் தொடரப்பட்டதைக் கண்டித்து சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் முன்பு இன்று போராட்டம் நடத்தப்பட்டது. ஏற்கனவே பாலா கைதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், கந்துவட்டி தொடர்பாக அவர் வரைந்த கேலிச்சித்திர பேனர் பெரிதாக வைத்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிந்ததைக் கண்டித்து இன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பாலா தனது வாய் மற்றும் கைகளில் கருப்பு துணி கட்டியிருந்தார்.
சுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே
பாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு
“பொதுமக்கள் போல் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்” - சிஆர்பிஎப் அறிக்கை
“போதும்..போதும்.. மன்னிக்க முடியாத காட்டுமிராண்டி செயல் இது” - ரஜினி கடும் கண்டனம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !