[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு விரும்புகிறதா? உச்சநீதிமன்றம் கேள்வி

perarivalan-case-sc-asks-reply-from-central-government

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை மத்திய அரசு விடுவிக்க விரும்புகிறதா இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை சதித் திட்டத்தின் பின்னணி குறித்து விசாரிக்க 1999-ஆம் ஆண்டு எம்டிஎம்ஏ என்ற (Multi Disciplinary Monitoring Agency) விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த எம்டிஎம்ஏ விசாரணை அறிக்கையை தனக்கு வழங்கக் கோரி ராஜீவ் கொலை வழக்கில், வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ்காந்தி கொலைக்காக பேட்டரி வாங்கிக் கொடுத்தேன்
என்பதுதான் என்மீதான குற்றச்சாட்டு. ஆனால் வெடிகுண்டில் வைக்கப்பட்டது நான் வாங்கி கொடுத்த பேட்டரி என நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என பேரறிவாளன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா இல்லையா என கேள்வி எழுப்பியது. பேரறிவாளன் மனு குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கு விசாரணை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close