[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்..

dengue-fever-symptoms-and-preventing-instructions

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால்  சிறியவர் முதல் பெரியவர் வரை  அனைத்து தரப்பினரும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் உயிரிழப்புகள் நேர்ந்து வருகின்றன. இந்நிலையில் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:

1. 2 நாட்கள் இடைவெளியில் விட்டு விட்டு காய்ச்சல் வருவது.

2. காய்ச்சலில் போது  வாய்ப்பகுதியை சுற்றிலும் நிறம் மாறுவது.

3. கண்கள் சிவந்து காணப்படுவது மற்றும் முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது.

4. காய்ச்சலுடன் மூச்சு திணறல் ஏற்படுவது.

5. குளிர், தலைவலி, கண்களை நகர்த்தும் போது வலி, கீழ் முதுகு பகுதியில் வலி

6. இரத்த வாந்தி, கறுப்பு நிற மலம் மற்றும் கால்களில் வீக்கம்.

7. கால்களிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியுடன் காய்ச்சல் 

தடுக்கும் வழிமுறைகள்:

1. பகலில் கடிக்கும் ஏடிஸ் ஈஜிப்ட் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

2. சுத்தமான தண்ணீரில் மட்டுமே டெங்குவை பரப்பும்  ஏடிஸ் ஈஜிப்ட்  கொசுக்கள் உருவாகின்றன. 

3. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு:

1. டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.

2.  போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3.  மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள கூடாது.  


 

வீடியோ

போட்டோ கேலரி

1 of 7

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close