[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

அரசு தேயிலை தோட்டத்தில் மரம் வெட்ட எதிர்ப்பு - எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

dmk-protest-in-nilgiri

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு தேயிலை தோட்டத்தில் சில்வர் ஓக் மரங்களை வெட்டும் நடவடிக்கையை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் அரசு தேயிலை தோட்டமான டேன்டீ செயல்பட்டு வருகின்றது. இந்த தோட்டங்களில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கான நடவடிக்கையை டேன்டீ நிர்வாகம் மற்றும் வனத்துறை மேற்கொண்டது. தமிழக வனத்துறை அமைச்சரின் உதவியுடனே மரங்களை வெட்டும் முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. டேன்டீயில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனைத்து தரப்பிலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் டேன்டீயில் உள்ள சில்வர்ஓக் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 8 கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மரங்களை வெட்டும் நடவடிக்கையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினர். முறையாக இ-டெண்டர் விட்டு மரங்களை வெட்டாவிட்டால், மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close