[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற குறைபாட்டு திறன் 60%லிருந்து 40% ஆக குறைப்பு: முதல்வர் அறிவிப்பு

tn-cm-jayalalithaa-announced-benefits-for-physically-challenged-people

மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர ‌உதவித் தொகை பெறுவதற்கான குறைபாட்டின் அளவு 60 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன்மூலம், 40 சதவிகித குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையாக ஆயிரம் ரூபாயை பெற இயலும் என்று அ‌வர் தெரிவித்தார். மேலும், உதவித் தொகை பெறுவதற்கு ஆதரவற்றோர் என்ற நிலையில் ‌இருக்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

‌மா‌ற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவிகித இடஒதுக்கீட்டை அரசு தவறாமல் கடைபிடிப்பதால் கடந்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 633 மாற்றுத் திறனாளிகள் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ப‌ல்வேறு திட்டங்களை கண்காணிக்கவும், அரசுக்கு ஆலோசனை வழங்கவும் சமூக நலத் துறை அமைச்சர் தலைமையிலான மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close