[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அசத்தும் கேஷ்லெஸ் கிராமம்.... டிஜிட்டலுக்கு மாறிய மக்கள்

village-turn-to-cashless-transactions

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிரா‌மம், முற்றிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறியுள்ளது.

கல்வி அறிவில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றா‌க விளங்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலாடி கிராம மக்கள் நவீன டிஜிட்டல் முறையில் வாழ்க்கை தகவமைத்துக் கொண்டுள்ளனர்‌.சில்லறை இல்லாமல் கடைக்கு செல்ல தயங்கும் மக்களுக்கிடையே டிஜிட்டல் முறையில் தங்கள் பரிவர்த்தனையை சாத்தியமாக்கியுள்ளனர் இந்த கிராம மக்கள். கடைகளுக்கு சென்றால் காசு இல்லை என்ற கவலை இல்லாமல் ஏடிஎம் கார்டுகளுடன் வலம் வருகின்றனர் இங்குள்ள மக்கள்.மத்திய‌ அரசின் அறிவிப்பால் காந்தலாடி கிராமம் மக்கள் ‌பெரிய அளவில் பாதிக்கப்படா‌மல் டிஜிட்டல் முறையில்‌ தங்கள்‌ வாழ்க்கையை நடத்த உதவி செய்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை இந்தியா திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தத்தெடுத்துள்ளது.அக்கிராமத்தில் அனைவருக்கு வங்கி கணக்குகள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.அக்கிராமத்தில் உள்ள கடைகளில் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.காந்தலாடி கிராமத்தின் இந்த தொடக்கம் மற்ற ஊர்களிலும் தொ‌டங்கப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழி செய்ய வேண்டும்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close