[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது

farmer-body-hand-over-to-family

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்தப் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயி மகாலிங்கத்தின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மகாலிங்கம் நேற்று போராட்ட களத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த விவசாயி மகாலிங்கத்தின் உடலை எடுத்து சொல்லாமல் அங்கு வைத்தே மற்றவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமாராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் விவசாயிகளின் பிரச்னை குறித்து முதலைமைச்சரை சந்தித்து முறையிட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து மகாலிங்கத்தின் உடலை சொந்த ஊருக்கு எடு‌த்துச் செல்ல விவசாயிகள் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை் தொடரப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close