[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

போயஸ் தோட்டத்துக்கு 240 காவலர்கள் எதற்கு?.. ஸ்டாலின் கேள்வி

stalin-question-about-poes-garden

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு அதிக எண்ணிக்கையிலான காவலர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

போயஸ் தோட்ட இல்லத்தில் அரசியல் சட்ட அதிகாரம் பெற்ற யாரும் வசிக்காத நிலையில், உயரதிகாரிகள் மற்றும் அதிக காவலர்களின் பாதுகாப்பை உடனடியாக காவல் துறைத் தலைவர் தடுத்து நிறுத்த ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சிஐடி பாதுகாப்பு பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்ட 240 பேர் அங்கு பணியில் நீடிப்பதாகவும் மரணமடைந்தவரின் பெயரில் பாதுகாப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு கிடைக்கும் வசதிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துப் பணியில் கடுமையாக பணியாற்றும் காவலர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மட்டுமின்றி கூடுதலாக 60 காவலர்களும் போயஸ் இல்லப் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பலர் இரட்டைப் பணி செய்ய வேண்டியிருப்பதாக புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

போயஸ் தோட்டத்தில் அரசியல் சட்டரீதியான அதிகாரம் படைத்த எவரும் இல்லாத நிலையில், அரசாங்க காவலர்கள் தனியார் செக்யூரிடிகள் போலப் பயன்படுத்தப்படுவது இழிவான செயல் என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பான இந்த நடவடிக்கையின் மூலம் மக்களின் வரிப்பணம் அநாவசியமாக செலவழிக்கப்படுவதுடன் காவலர்களின் நேரம், உழைப்பு, திறமை வீணடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய அதிகார மீறலை காவல் துறைத் தலைவர் உடனடியாக தடுத்து நிறுத்தத் தவறினால், சட்டரீதியான நடவடிக்கையை திமுக மேற்கொள்ளும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close