[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ராம மோகன ராவ் மகன் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது

income-tax-raid-in-rama-mohan-rao-son-office

ராம மோகன ராவின் மகன் விவேக்கின் அலுவலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராம மோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதனால் தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே, ராம மோகன ராவின் மகனான விவேக்கை நேற்று அவரது நந்தனம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற வருமான வரித்தறை அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர். நேற்று தொடங்கிய விசாரணையும், சோதனையும் இன்று அதிகாலை இரண்டு மணி வரை நீடித்தது. இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம மோகன ராவ் மற்றும் அவரது மகனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் பலர் வருமானவரித்துறையின் வளையத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close