[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது

tamilnadu-cabinet-meeting

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதன் முதலாக நாளை கூடுகிறது.

சென்னை போயஸ் தோட்ட இ‌ல்லத்தில் சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினர். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டப்பேரவை கொறடா, மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவை அடுத்து, கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். இவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். பன்னீர் செல்வம் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற உள்ளது. நாளை காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழக நிலவரம் குறித்தும், காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close