[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

விடுமுறை தினத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்றிய வங்கி அதிகாரிகள்

4-bank-employees-suspended-in-pondicherry

விடுமுறை நாட்களில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக வங்கி அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 5,50,000 ரூபாய் செல்லாத நோட்டுகள்

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கடந்த மாதம் 8ம் தேதி வெளியானது. இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சேர்க்கும் பொருட்டு 9,10 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை நாளன்று, புதுச்சேரி லாஸ்பேட்டை கூட்டுறவு வங்கிக் கிளையில் மேலாளராக பணிபுரியும் குப்புசாமி, காசாளர் ரவி இருவரும் ரூ.3,00,000 மதிப்புள்ள செல்லாத நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல் மாஹேயில் உள்ள கூட்டுறவு வங்கிக் கிளையில் மேலாளர் ஷியாமளா, காசாளர் சந்தோஷ்குமார் இருவரும் ரூ.2,50,000 செல்லாத நோட்டுகளை மாற்றியதும் தெரியவந்துள்ளது.

மொத்தமாக ரூ.5,50,000 செல்லாத நோட்டுகளை மாற்றியதற்காக 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் வங்கி அதிகாரிகள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close