[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

வந்தது ரூ.1 கோடி மதிப்பிலா‌ன நாணயங்கள்.. மக்கள் வேதனையை போக்க நடவடிக்கை

1-crore-coins-arrive-in-salem-banks

தமிழகத்தில் சில்லறை தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அதனை போக்க, ஒரு கோடி ரூபாய் அளவிலான நாணயங்களை சேலம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார். இதனால் ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாடு ஓரளவிற்கு சீராகி வருகிறது. இந்நிலையில் மக்கள் பிரச்னைகளை மேலும் போக்கும் விதமாக சேலத்தில் உள்ள வங்கிகளுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிலான நாணயங்களை ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது.

இவைகள் பித்தளை மற்றும் stain less steel ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட புதிய நாணயங்கள் ஆகும். ஒன்று, ஐந்து மற்றும் பத்து ரூபாய் நாணயங்களாக இவை உள்ளன. சேலம் மாவட்டம் ஆத்தூர், சேலம் நகர் பகுதி மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் அதிக பண பரிவர்த்தனை நடைபெறும் வங்கிகளான, கனரா வங்கி, ஸ்டேட் வங்கி என ஒவ்வொரு வங்கிக்கும் மூன்று முதல் பத்து லட்சம் ரூபாய் வரையில் இந்த புதிய நாணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சேலத்தை தொடர்ந்து இன்று மாலைக்குள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கும் இந்த நாணயங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close