[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பாலமுரளி கிருஷ்ணா மறைவு உலக இசைக்கே மகத்தான பேரிழப்பு.. வாணி ஜெயராம்

vani-jayaram-condolence-for-balamurali-krishna-dead

பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு உலக இசைக்கே மகத்தான பேரிழப்பு என பின்னணி பாடகி வாணி ஜெயராம் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா உடநலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு பின்னணி பாடகியான வாணி ஜெயராம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

பாலமுரளி கிருஷ்ணா உடனான நினைவு குறித்து பகிர்ந்து கொண்ட வாணி ஜெயராம், சமீபத்தில் தான் அவரது பிறந்த நாளில் அவரை வணங்கி வாழ்த்துகளை பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார். பள்ளிப் பருவத்திலிருந்தே அவரை நன்றாக தெரியும் என குறிப்பிட்ட வாணி ஜெயராம், அவருடன் இணைந்து பாடிய பாடல்களையும் நினைவு கூர்ந்துள்ளார்.

தன்னிடம் இவ்வளவு வித்தை இருந்தாலும், தான் என்ற சிறிய அகம்பாவமும் இல்லாமல் 5 வயது குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரை அனைவரிடமும் அலட்சியம் காட்டாமல் அன்பு செலுத்த கூடியவர் பாலமுரளி கிருஷ்ணா என குறிப்பிட்டுள்ளார். அவரின் மறைவு மனதிற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close