[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

’மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்’: தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

jaya-writes-letter-to-party-cadres

உடல்நலம் தேறிய பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா முதன்முறையாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ல் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றால் அவர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது. சிலநாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை தொடர்ந்தது. இந்தசூழலில் முதலமைச்சர் ஜெயலலிதா நேரடியாக பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் தனது உடல்நலம் தேறிவிட்டதை அறிக்கை வாயிலாக உறுதிபடுத்தியுள்ளார். அவர் தனது அறிக்கையில், மக்களின் பிரார்த்தனையில் மறுபிறவி எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வெகுவிரைவில் முழு உடல்நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், தனக்காக உயிர்நீத்த தொண்டர்களுக்காக மிகுந்த மனவேதனையுற்றதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகம், புதுச்சேரியில் நடக்கும் 4 தொகுதிகள் தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாடுபட வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close