[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

வங்கி சேவையில் ரோபோ பயன்பாடு

city-union-bank-use-robot-for-customer-service

சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சேவையை எளிமைபடுத்தும் விதமாக ரோபோ உதவி மையத்தைத் தொடங்க உள்ளது.

சென்னை தியாகராய நகரிலுள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு ரோபோவின் மாதிரி வடிவம் கொண்டுவரப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாக வா‌டிக்கையாளர்களுக்கு ஏற்படும் 250க்கும் மேற்பட்ட கேள்வி‌களுக்கு பதில் சொல்லும் விதமாக ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோ‌போ‌ சோதனை அடிப்படையில் தியாகராய நகரிலுள்ள சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் வைக்கப்பட உள்ளதாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ரோபோ சேவை தமிழகத்தின் பல இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும், வரும் மார்ச் மாதத்திற்குள் 30 ரோபோக்கள் இத்த‌கைய சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரி‌வித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close