[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ரியோ ஒலிம்பிக்: பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தும் இந்திய வில்வித்தை வீராங்கனைகள்

rio-olympics

மகளிர் வில்வித்தையில் தீபிகா குமாரி மற்றும் பம்பைலா தேவி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.

ரியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தீபிகா குமாரி, ரீகர்வ் பிரிவு முதல் சுற்றில் ஜார்ஜியாவின் கிறிஸ்டின் எசபா-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில் 6-4 என்ற செட் புள்ளிகள் கணக்கில் தீபிகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் சுற்று முடிந்த சிறிது நேரத்தில், இரண்டாவது சுற்றில் 6-2 என இத்தாலியின் சர்டோரியை எளிதில் வீழ்த்தினார் தீபிகா. இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனத் தைபேயின் டான் யா டிங் உடன் தீபிகா குமாரி பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

இந்நிலையில் வில்வித்தையில் மற்றொரு இந்திய நட்சத்திரமான பம்பைலா தேவி, முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் லாரான்ஸ் பால்டாஃப்-பையும், இரண்டாவது சுற்றில் சீனத் தைபேயின் லென் சின் ஷியா-வையும் 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கால்பதித்தார். இந்த இரு இந்திய வில்வித்தை வீராங்கனைகளும் பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement:
Related Tags : Rio olimbic
Advertisement:
Advertisement:
[X] Close