[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பும்ராவை ஜாலியாக கிண்டல் செய்த இஷாந்த் ஷர்மா..!

ishant-sharma-opens-up-on-pairing-with-jasprit-bumrah-in-bowling-attack

பும்ராவுடன் இணைந்து பந்துவீசுவது குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் கடந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் ஷர்மாவின் முதல் அரைசதமாகும். இஷாந்த் ஷர்மா இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் இஷாந்த் ஷர்மா தனது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சில வருடங்களுக்கு முன்பு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து ஜாகிர் கான் என்னுடன் உரையாடினார். எனினும் அவர் 92 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி ஓய்வு பெற்றார். நான் இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் 100 டெஸ்ட் போட்டியை கடந்து விடுவேன். ஆனால் எதிர்காலத்தை பற்றி யோசிப்பதைவிட ஒவ்வொரு டெஸ்ட் போட்டியை மட்டுமே நான் சிந்திப்பேன். அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும். 

பும்ரா ஒரு சிறப்பான பந்துவீச்சாளர். நாங்கள் அனைவரும் பந்துவீச்சில் வார்ம் அப் ஆகும் முன்பே பும்ரா 5 அல்லது 6 விக்கெட்டுகளை எடுத்து விடுகிறார். எனவே நான் அவரிடம் நாங்கள் வார்ம் அப் ஆகும் வரை விக்கெட் எடுக்காமல் இரு என்று கிண்டலாக கூறுவேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக இஷாந்த் ஷர்மா 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 277 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close