[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்!

fire-breaks-out-at-sreesanth-s-house-wife-and-children-rescued

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்
 
இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்தின் வீடு கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் வரவேற்பறை மற்றும் படுக்கை அறையில் பரவி தீ மளமளவென பரவியது.

உடனடியாக கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட போது ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லை என்றும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை, உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி நீக்கியது. மேலும் ஸ்ரீசாந்திற்கான தண்டனை 7 ஆண்டுகள் என நீதிபதி டி.கே.ஜெயின் சமீபத்தில் தெரிவித்தார். அதன்படி வரும் 2020 செப்டம்பர் 12 ஆம் தேதியுடன் ஸ்ரீசாந்தி தடை காலம் முடிவுக்கு வருகிறது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close