[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலகக் கோப்பை போட்டியில் தனி நாடு கோஷம் ! 4 பேர் கைது

fans-ejected-from-stadium-after-political-protest-during-india-vs-new-zealand

இந்தியா -  நியூசிலாந்து போட்டியின் போது சீக்கியர்களுக்கு தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதலில் தகுதி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று களம் கண்டன. 46.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனையடுத்து எஞ்சியுள்ள ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்கள் தெரிவித்தனர்.

நேற்றைய போட்டியின் போது ரசிகர்கள் 4 பேர் காலிஸ்தான் இயக்கம் சார்பாக தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மைதானத்தில் அரசியல் ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து பேசிய காவலர் ஒருவர், இந்தியா -  நியூசிலாந்து போட்டியின் போது சீக்கிய மதத்தைச் சேர்ந்த 4 பேர் சில அரசியல் வாசகங்கள் அடங்கிய டி சர்ட்டை அணிந்துகொண்டு தனிநாடு கோரிக்கை தொடர்பான முழக்கங்களை எழுப்பினர். மைதானத்தின் பாதுகாவலர்கள் புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்

இந்தியா - இலங்கை போட்டியின் போது ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பேனருடன் மைதானத்தின் மேலே விமானம் பறந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close