[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

53 ரன்களில் 4 விக்கெட்டுகள் : தடுமாறும் இங்கிலாந்து

england-vs-australia-match-32-eng-loss-4-wickets-in-53-runs

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

உலகக் கோப்பை தொடரின் 32வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை இடையே நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீசியது. இதனால் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் சதம் அடித்து அசத்தினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அரை அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி கிரிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதைத்தொடர்ந்து 2வது பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் வின்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் 0 (2) அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து நம்பிக்கை ஆட்டக்காரர் ஜோ ரூட் 8 (9) ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் மார்கன் 4 (4) ரன்களிலேயே நடையைக் கட்டினார். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய பேரிஸ்டோவ்-ம் 27 (39) ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close