[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

“எல்லோருக்கும் இப்படியொரு நாள் வரும்” - ரஷித் கானுக்காக ஒலித்த குரல்கள்

rashid-khan-becomes-most-expensive-bowler-in-world-cup-history

உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான பெருமைக்கு ஆப்கான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் ஆளாகியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 9 ஓவரில் இவர் 110 ரன்கள் கொடுத்தார். இதற்கு முன்பாக நியூசிலாந்து அணியின் மார்டின் ஸ்னெடன் 1983 உலகக் கோப்பையில் கொடுத்த 105 ரன்களே மோசமான பந்துவீச்சாக இருந்தது. தற்போது அந்தச் சாதனை ரஷித் வசம் வந்துள்ளது. மார்டின் கூட இரண்டு விக்கெட் எடுத்திருந்தார். ஆனால் ரஷித் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 

       

ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, 2016 ஆம் ஆண்டி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் வாஹப் ரியாஸ் 10 ஓவர்களில் 110 ரன்கள் கொடுத்ததே மோசமான பந்துவீச்சு. அவரது சாதனையை ரஷித் நிகர் செய்துள்ளார். ஆனால், 9 ஓவரிலே ரஷித் 110 ரன்கள் வழங்கியுள்ளார் என்பது முக்கியமானது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள வீரரான ரஷித் கானுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய நாள் அவருக்கு மறக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. இங்கிலாந்து அணி நேற்றையப் போட்டியில் 397 ரன்கள் விளாசி ஆப்கான் அணியை சோதித்து விட்டது. அந்த அணியின் கேப்டன் மோர்கன் (148), பேரிஸ்டோவ்(90), ரூட் (88) ரன்கள் குவித்தனர். மோர்கன் 22 சிக்ஸர் விளாசினார். ரஷித்தின் ஓவரிகளில் மட்டும் 12 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.

               

110 ரன்கள் கொடுத்ததை அடுத்து ரஷித் கானை நேற்று பலரும் கலாய்த்து இருந்தனர். இதில், குறிப்பாக ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்திலே ரஷித் கான் பற்றி கிண்டல் செய்து கருத்து பதிவிடப்பட்டு இருந்தது. அதில், “இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கான் அணிக்காக ரஷித் கான் முதல் சதம் அடித்துள்ளதாக கேள்விப்பட்டோம். என்ன ஆச்சர்யம்! 56 பந்துகளில் 110 ரன்கள். உலகக் கோப்பை அல்லது எந்தவொரு ஒருநாள் தொடரிலும் ஒரு பந்துவீச்சாளரால் அடிக்கப்பட்ட அதிகப்படியான ரன் இது. இளம் வீரர் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்” என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

           
இந்நிலையில், இந்த ட்விட்டர் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரஷித் கானுக்கு ஆதரவாகவும் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லுகே ரைட்டர், “அபத்தமான ட்வீட். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனை படைத்துள்ள வீரருக்கு மரியாதை செலுத்தாமல் இப்படியா கிண்டல் செய்வீர்கள்” என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதேபோல், இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் பிராட் கூறுகையில், “ரஷித் கான் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். பார்ப்பதற்கு அற்புதமான பந்துவீச்சு அவருடையது. விளையாட்டில் ஒவ்வொருவருக்கும் மோசமான நாள் என்று ஒன்று வரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

             

ரஷித் கான் 63 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 128 விக்கெட் சாய்த்துள்ளார். அதேபோல், 38 டி20 போட்டிகளில் விளையாடி 75 விக்கெட் எடுத்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close