[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

“ஷிகர் தவானுக்கு தொடர் சிகிச்சை” - பிசிசிஐ தகவல்

bcci-about-shikhar-dhawan-health-conditions

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் அபார சதமடித்தார். இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. அப்போதே களத்துக்குள் பிசியோதெரபிஸ்ட், அவருக்கு சிகிச்சை அளித்தார். இருந்தாலும் வலியுடன் விளையாடிய தவான், 109 பந்தில் 117 ரன் குவித்தார். அந்த விரல் கடுமையாக வீங்கியதை அடுத்து, அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. ஜடேஜா அவருக்குப் பதில் பீல்டிங் செய்தார்.

இதனிடையே அவர் கை விரலை இன்று ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்திய அணி, நியூசிலாந்து அணியை, வரும் 13 ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதற்குள் அவர் காயம் குணமாகிவிடுமா என்பது தெரியாமல் உள்ளது.

 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பிசிசிஐயின் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிசிசிஐ, “ ஷிகர் தவான் பிசிசிஐயின் மருத்துவக் குழு கண்காணிப்பில் தற்போது உள்ளார். அவரை இங்கிலாந்தில் தொடர்ச்சியாக வைத்திருக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர் காயத்தின் தன்மை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close