[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பின்... பாகிஸ்தான் வீரர்களுக்கு புது அனுமதி!

pakistan-players-can-stay-with-wives-but-only-after-india-match

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்கள், குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ளலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் இரு தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது. 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியின் போது, வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை விதித்தது. விளையாட்டில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் உடன் இருந்தால் கவனம் சிதறலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தான் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். பின்னர் வீரர்கள் சார்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடன் புது கோரிக்கை வைக்கப்பட்டது. ஜூன் 12 ஆம் தேதி நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தங்களுடன், குடும்பத்தினர் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதுதான் அது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேறொரு முடிவை அறிவித்துள்ளது. அதாவது ஜூன் 16- ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close