[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

நோ பால் சர்ச்சை - எல்லை மீறி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேப்டன் கூல் - தோனி

dhoni-argument-umpires-for-no-ball-in-cskvrr-match

கிரிக்கெட்டில் சில சமயங்களில் நடுவரின் தீர்ப்பில் துல்லியம் தவறும் போது களத்தில் விளையாடி கொண்டு இருக்கும் பேட்ஸ்மேன் மற்றும் பவுளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் விளையாடி முடிந்து அவுட் ஆகிய பின்பு வெளியில் இருந்து போட்டியை காணும் ஒரு வீரர் நடுவரின் தீர்ப்பு திருப்தி அளிக்காத நிலையில் களத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் சண்டையிடுவது விந்தையான ஒன்று.

நேற்றைய சென்னை vs ராஜஸ்தான் போட்டியில் தான் இந்த விந்தையான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரை மேலும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது, அவ்வாறு செய்தவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் "மஹேந்திர சிங் தோனி" வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 

முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தோனி அவுட் ஆகி வெளியேறியிருந்தார். 19வது ஓவரின் 4வது பந்தை வீசிய ஸ்டோக்ஸ், சாண்ட்நர் இடுப்பிற்கு மேல் வீசியதால் கிரீஸ் அருகே இருந்த நடுவர் உல்ஹாஸ் காந்தி "நோ" பால் என சிக்னல் காட்டினார். ஆனால் நோ பால் வீசப்பட்டால் வழங்கக்கூடிய "ஃப்ரீ ஹிட்" வழங்கப்படவில்லை. மைதானத்தில் குழப்பம் நிலவ தொடங்கிய நிலையில், வெளியில் இருந்து போட்டியை கண்டு கொண்டு இருந்த தோனி, மைதானத்திற்கு உள்ளே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ராஜஸ்தான் வீரர்கள் சிலர் நடுவரிடம் வர, ரசிகர்கள் அனைவருமே குழம்பி போயினர். இறுதியில் "நோ பால் உம் இல்லை", "ப்ஃரீ ஹிட் உம் இல்லை" என முடிவு கொடுக்கப்பட்டு, பேட்ஸ்மேன் சாண்டநர் ஓடி எடுத்த 2 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

ரசிகர்கள் பலர் கிரீஸ் அருகே இருந்த நடுவர் உல்ஹாஸ் காந்தி நோ பால் என தீர்ப்பு வழங்கியதை கிவனித்து இருக்கலாம், ஆனால் கிரிக்கெட் விதிகளின் படி இடுப்பு அளவிற்கு மேல் வரும் பந்தை "நோ பால்" என அறிவிக்கும் அதிகாரம் square leg திசையில் இருக்கும் இரண்டாவது நடுவருக்கே உண்டு. அந்த வகையில் நேற்று square leg திசையில் இருந்த நடுவர் ப்ருஸ் ஒக்ஸேன்ஃபோர்ட் அதை நோ பால் என அறிவிக்காமல் சரியான பந்து என கூறியதே அந்த குழப்பங்களிற்காண காரணம். இறுதியில் அதை சரியான பந்து என கிரீஸ் அருகே இருந்த நடுவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை உருவாகிவிட்டது.

அப்போது தான் அதை ஏன் நோ பால் என முதலில் அறிவித்து, பின்னர் சரியான பந்து என்கிறீர்கள் என தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்ன செய்கிறார் தோனி என சென்னை ரசிகர்களே ஒரு நிமிடம் திகைப்புக்கு உள்ளாகினர். சாதாரணமாக அவ்வளவு எளிதில் எதையும் வெளியே காட்டிகொள்ளாத தோனி, எப்போதுமே "கேப்டன் கூல்" என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். உலகக்கோப்பை முதல் உள்ளூர் கோப்பை வரை அனைத்தையும் கடந்து வந்துள்ள தோனி, ஐ.பி.எல் லில் சாதாரண ஒரு லீகு போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக நடந்து கொண்ட விதம் அவரின் "கேப்டன் கூல்" என்ற டேக்-ஐ விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அனைத்து வீரர்களும் நடுவரின் தீர்ப்புக்கு உட்பட்டவர்களே என்ற நிலையில் - எல்லை மீறி சென்றுவிட்டாரோ தோனி ?

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close