[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

'ஒரு தடவ தான்டா தவறும்'' - பஞ்ச் டயலாக்கை தெறிக்க விட்ட பராசக்தி எக்ஸ்பிரஸ்! 

imran-tahir-tweet-after-csk-match

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பைக்கு எதிரான 4வது போட்டியில் தோல்வியடைந்தது. நேற்று நடைபெற்ற 5வது போட்டியில் வெற்றி பெற்றது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் முடிந்துவிட்டாலே அடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது ஹர்பஜன் மற்றும் இம்ரான் தாஹிரின் ட்வீட்டுக்காகவே. வெற்றியோ தோல்வியோ, நறுக்கென படத்தின் பஞ்ச் டயலாக்கை எடுத்து ட்வீட்டாக போட்டு ரசிகர்களை குஷிபடுத்துவார்கள்.

இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து ட்வீட் செய்துள்ள இம்ரான் தாஹிர், '' ஒரு தடவ தான்டா தவறும், எடுடா வண்டிய, போடுடா விசில '' என பஞ்ச் டயலாக்கை பதிவிட்டுள்ளார். பராசக்தி எக்ஸ்பிரஸின் பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

முன்னதாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கேவின் வெற்றி குறித்து தமிழில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில்,  “நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல. உன்ன மட்டும் தான். நான் என்ன நம்புனேன். அத தாண்டி என் நண்பன் தோனி என்ன நம்புறாங்க? அதுக்கு கைமாறா வெற்றி.  ஓரம் கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும். சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி” என பதிவிட்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close