[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

மீண்டும் ஏமாற்றிய உத்தப்பா - 50 ரன்னில் 4 விக்கெட் இழந்தது கொல்கத்தா

ipl-2019-dc-vs-kkr-live-score-delhi-win-toss-and-elect-to-bowl-first

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

12வது ஐபிஎல் தொடரில் டெல்லி நடைபெற்று வரும் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. டெல்லி அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹனுமா விஹாரி, ஹர்ஷல் படேல், கிறிஸ் மோரிஸ் மற்றும் சந்தீப் லமிச்சனே இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா அணியில் காயம் காரணமாக சுனில் நரைன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நிகில் நாயக் விளையாடுகிறார்.

கொல்கத்தா அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. டெல்லி அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக டெல்லியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தது. கொல்கத்தா - டெல்லி அணிகள் இதுவரை 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும், டெல்லி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 7 ஓவர்கள் முடிவில் 50 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்துள்ளது. நாயக் 7, உத்தப்பா 11 ரன்னில்கள் ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த லயன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரானா 1 ரன்னில் நடையைக் கட்டினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close