[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இன்று, 3-வது ஒரு நாள் போட்டி: சொந்த ஊரில் மிரட்டுவாரா தோனி?

india-eye-series-win-in-ms-dhoni-s-hometown-ranchi

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்தி ரேலிய அணி கைப்பற்றியது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில், கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 3 வது போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிற து. இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இன்று போட்டி நடக்கும் ராஞ்சி, தோனிக்கு சொந்த ஊர். சொந்த மண்ணில் அவர் ஆடும் கடைசி சர்வதேச போட்டி. அதனால் அவர் அதிரடி ஆட்டத்தை இங்கு வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, தோனியை கவுரவிக்கும் விதமாக, ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம், ராஞ்சி மைதானத்தின் தெற்கு ஸ்டாண்டுக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது.

இந்திய அணியில் தவான் சரியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்க தவறி வருகிறார். கடந்த 2 போட்டிகளிலும் சரியாக சோபிக்கவில்லை. நியூசிலாந்து தொடரில் கலக்கிய அம்பத்தி ராயுடு, இங்கு சரியாக ஆடவில்லை. இன்றைய போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். விஜய் சங்கர் இந்திய அணிக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார். இன்றைய போட்டியிலும் அவர் தனது திறமையை நிரூபிப்பார். முதல் 2 போட்டியில் களமிறங்காத வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அணிக்கு திரும்புகிறார். அதனால் முகமது ‌ஷமி உட்கார வைக்கப்படலாம்.

ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி யுள்ளது. மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர் களிடம் சரண்டராகி விடுகின்றனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும் என்பதால், ஆஸ்திரேலிய அணி, தக்க பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close