[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“மறுமுனையில் தோனி இருக்கும் போது கவலைப்பட தேவையில்லை” கேதர் ஜாதவ்

hyderabad-odi-kedar-jadhav-ms-dhoni-power-india-to-6-wicket-win-over-australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், 81 ரன்கள் குவித்த கேதர் ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார்.  

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கவாஜா அதிகபட்சமாக 50(76) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 40, ஸ்டோய்னிஸ் 37, கர்ரே 36 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். 

பின்னர், விளையாடிய இந்திய இந்திய அணி 100 ரன்களை எட்டுவதற்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் என்ற வலுவான நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால், விராட் 44, ரோகித் 37, ராயுடு 13 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், தோனி-கேதர் ஜாதவ் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 

   

இந்திய அணி 99 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், தோனி - கேதர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றது. இறுதியில், இந்திய அணி 48.2 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு இது நல்ல தொடக்கமாக அமைந்துவிட்டது.

      

கேதர் ஜாதவ் 81(87), தோனி 59(72) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 81 ரன்கள் எடுத்த கேதர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தோனி தொடர்ச்சியாக 4வது அரைசதம் அடித்துள்ளார்.

          

போட்டிக்கு பின்னர் கேதர் ஜாதவ் பேசுகையில், “சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் இதுபோன்ற போட்டி ஒன்றில் சேஸ் செய்தோம். உங்களுக்கு மறுமுனையில் தோனி இருக்கும் போது, நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். மிடில் ஆர்டரில் ஆட்டத்தை கணித்து விளையாட அவரைவிட சிறந்தவர் யாரும் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம். எங்கள் கேப்டனிடம் இருந்து நிறைய கற்றுள்ளோம்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close