நான்கு பந்தில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட் வீழ்த்தி, ஆப்கானிச்தான் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான் சாதனை படைத்தார்.
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் டேராடூனில் நடந்து வந்தது. இந்த அணிகளின் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 210 ரன் கள் குவித்தது. முகமது நபி 36 பந்துகளில், 6 பவுண்டரி, 7 சிக்சருடன் 81 ரன்கள் விளாசினார். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி, 20 ஓவ ர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற் றியது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினா ர். இதில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக் கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்