[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

முஷ்டாக் அலி டிராபி: மும்பை அணிக்கு திரும்பினார் பிருத்வி ஷா!

mushtaq-ali-trophy-prithvi-shaw-returns-after-injury-break

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா, இப்போது மும்பை அணிக்குத் திரும்பியுள் ளார். 

ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையே, சையத் முஷ்டாக் அலி கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த வருடத்துக்கான தொடர், வரும் 21 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில், இந்திய அணியில் இடம் பிடித்துள் ள முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

மும்பை அணி, ரஹானே தலைமையில் களம் காணுகிறது. இதில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த பிருத்வி ஷா விளையாடுகிறார். மும்பையை சேர்ந்த 19 வயது வீரரான பிருத்வி ஷா, கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, சதம் அடித்தார். 

இதையடுத்து அவர் ஆஸ்திரேலிய தொடருக்குத் தேர்வானார். அங்கு நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட் டது. இதனால் இந்தியா திரும்பிய அவர், சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது உடல் நலம் தேறியுள்ள அவர், சையத் முஸ்டாக் அலி டிராபிக் கான போட்டியில் விளையாடுகிறார்.

இதுபற்றி பிருத்வி ஷா கூறும்போது, ‘’காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடாததில் வருத்தம்தான். இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில் மகிழ்ச்சி. இப்போது உடல் நலம் தேறிவிட்டேன். மும்பை மற்றும் இந்திய அணிக்காகக் களமிறங்கி சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார். 

பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடமியில், பயிற்சி பெற்ற பிருத்வி ஷா, கடந்த வியாழக்கிழமை ’யோ யோ’ டெஸ்ட்டில் தேர்வாகி யுள்ளார்.

முஷ்டாக் அலி போட்டிக்கான மும்பை அணி:
ரஹானே (கேப்டன்), பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தவால் குல்கர்னி, சித்தேஷ் லாட், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் பார்கர், ஏக்நாத் கெர்கர், துருமில், ஷாம்ஸ் முலானி, சுபம் ரஞ்சனே, துஷார் தேஷ்பாண்டே, ராய்ஸ்டான் டயஸ்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close