[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

“நாம் இருவரும் இரட்டையர்கள்” - அனுஷ்கா சர்மா சாயலில் ஒரு அமெரிக்க பாடகி  

anushka-sharma-and-julia-michaels-are-doppelgangers-it-s-breaking-the-internet

இந்த உலகத்தில் ஒருவரை போல ஆறுபேர் இருப்பார்கள் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது சமூக வலைத்தள தலைப்புச் செய்திகளில் அடிப்பட ஆரம்பித்திருக்கிறார் அனுஷ்கா சர்மா. பாலிவுட் நடிகையான இவர், விராட் கோலியை திருமணம் செய்து கொண்ட பிறகு, உலக அளவில் புகழ்பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார். ஆகவேதான் இன்று இந்தச் சுவாரஸ்யமான செய்தியின் பின்னணியில் இவர் இணைத்து பேசப்பட்டுகிறார்.

அப்படி என்னதான் செய்தி?

சமூக வலைத்தளத்தில் அனுஷ்கா சர்மா படத்தையும் அமெரிக்க பாடகி மற்றும் பாடலாசிரியர் ஜூலியா மைக்கேல்ஸ் புகைப்படத்தையும் பதிவிட்டு இருவரையும் பலர் வைரலாக்கி வருகின்றனர். அதற்கான காரணம், இவர்கள் இருவரும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபோல் இருப்பதுதான். ஆகவே இந்த இருவரும் உலகத்தில் ஒரே தோற்றத்தில் வாழும் ஆறு பேர்களின் சாட்சி எனக் கூறி சிலர் கருத்திட்டு வருகின்றனர். அதற்கேற்ப அனுஷ்காவும் ஜூலியாவும் உருவச் சாயலில் ஒரே மாதிரியே உள்ளனர்.

அமெரிக்க பாடகி ஜூலியா, தனது ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்கா படத்தையும் தனது படத்தையும் பதிவிட்டு  “ஹாய் அனுஷ்கா, நாம் இருவரின் தோற்றமும் இரட்டையர்களைப் போல இருக்கிறது” எனக் கூறி பதிவை அனுஷ்காவிற்கு டேக் செய்திருந்தார்.

அதனைப் பார்த்த அனுஷ்கா சர்மா, “அட கடவுளே! நானும் தோற்றத்தில் உங்களை போலவே இருக்கிறேன். நம்மை போன்று மீதமுள்ள 5 பேர்கள் என் முழு வாழ்நாளில் இருப்பார்கள்”என்று கூறியுள்ளார். இதனை வைத்து பலரும் தங்களை போல  உள்ள சிலரின் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். விரைவில் இது ஒரு ட்ரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close