[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

வெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி

australian-open-2019-virat-kohli-meets-roger-federer-ends-australia-tour-in-an

ஆஸ்திரேலிய தொடரை வெற்றியோடு மட்டுமில்லாமல் ரோஜர் ஃபெடரரையும் சந்தித்து மனமகிழ்ச்சியோடு முடிக்கிறார் விராட் கோலி.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. முதலில் 3 போட்டிகளில் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி நிலையில் அது சமனில் முடிந்தது. இதனையடுத்து நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கிலும், அதன்பின் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. வெற்றிக் களிப்பில் இந்திய அணி தாயகம் திரும்ப உள்ளது.

இந்நிலையில் கேட்பன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை கண்டுகளித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை கண்டுகளித்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி, அதனோடு நின்றுவிடாமல் பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரரையும் சந்தித்து பேசியுள்ளனர். ஏற்கெனவே தொடர்ச்சியாக 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸை வென்றுள்ள ரோஜர் ஃபெடரர் தற்போது மூன்றாவது முறையும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். இந்நிலையில் விராட் கோலி தம்பதி ரோஜர் ஃபெடரரை சந்தித்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களையும் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஆஸ்திரேலிய ஓபனில் என்னவொரு அருமையான நாள் இன்று. ஆஸ்திரேலிய தொடரை முடிப்பதற்கான அற்புத வழி..”என பதிவிட்டுள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலிய ஓபனில் பார்வையாளராக பங்கேற்ற விராட் கோலி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்தபோது, அனுஷ்கா ஷர்மா, இந்திய அணியை மட்டுமில்லாது தனது கணவரையும் வெகுவாக பாராட்டியிருந்தார். “என்னவொரு மறக்க முடியாத தொடர் இது. வரலாற்று வெற்றியை பதித்ததால் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள். விராட் கோலியை நினைத்து பெருமைப்படுகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்

இதனிடையே கோலி தலைமையிலான இந்திய அணி வரும் புதன்கிழமை நியூசிலாந்து செல்ல உள்ளது. அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close