[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சமீபத்திய நிகழ்வுகள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது - மிதாலிராஜ்

row-affected-me-and-family-mithali-raj

சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் என்னையும், எனது குடும்பத்தினரையும் மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது என இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழை தாய்மொழியாக கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்து ஐதராபாத்தில் குடியேறியவர் மிதாலிராஜ். இவர் இதுவரை 183 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆறு சதங்கள், 49 அரை சதங்கள், 4 7போட்டிகளில் ஆட்டமிழக்காதது என்பது
 மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் சதமடித்த ஐந்து வீராங்கனைகளில் ஒருவர் என்கிற பெருமைக்கும் 
உரியவர் ஆவார்.

அனுபவ வீராங்கனையான இவர், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவரை, முக்கியமான அரையிறுதி போட்டியில் அணியில் சேர்க்காமல் உட்கார வைத்தனர். அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட மிதாலிராஜின் மேனேஜர், 'டி20 அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சூழ்ச்சிக்காரர், பொய் சொல்கிறார், கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர்’ என்று கூறியிருந்தார்.

 இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. அதில், தனது புகழை ரமேஷ் பவார் முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் என்றும் தன்னை அவமானப்படுத்தினார் என்றும் கூறியிருந்தார் மிதாலிராஜ். மேலும் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தனக்கு மன உளைச்சல் கொடுத்ததாக கூறியிருந்தார்.

இதுகுறித்து பயிற்சியாளர் ரமேஷ் பவார், ‘பேட்டிங் வரிசையை மாற்றினால் கிரிக்கெட்டு முழுக்கு போடுவேன்’ என்று மிதாலி ராஜ் மிரட்டியதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவி காலத்தை நீட்டிக்காமல், புதிய பயிற்சியாளராக தமிழகத்தைச் சேரந்த டபுள்.யு.வி. ராமனை நியமித்தது பிசிசிஐ. பல தடைகளையும், அவமானங்களையும், சர்ச்சைகளையும் கடந்து இந்திய மகளிர் கிரிக்கெட் ஒரு நாள் அணிக்கு மீண்டும் கேப்டனாக தேர்வாகியுள்ளார் மிதாலி ராஜ்.

இதுகுறித்து மிதாலி ராஜ் கூறுகையில், “சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் என்னையும், எனது குடும்பத்தினரையும் மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. இப்போது புதிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு நியூசிலாந்து தொடரில் கவனம் செலுத்த உள்ளேன். புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டபிள்யூ.வி.ராமனுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close