[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

பயிற்சி ஆட்டம்: பிருத்வி ஷா, கோலி அரைசதம், ராகுல் ஏமாற்றம்!

tour-match-virat-kohli-maintain-soldi-india-progress

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் பிருத்வி ஷா, புஜாரா, விராத் கோலி ஆகியோர் அரை சதம் அடித்தனர். 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொட ரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.

இதற்கிடையே, இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.  இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் பிருத்வி ஷாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். வழக்கமாக தமிழக வீரர், முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்குவார்.  அவர் தொடர்ந்து சொதப்பி வருவதால் ஏழாவது வீரராக களமிறக்க முடிவு செய்யப்பட்டு உட்கார வைக்கப்பட்டார்.

தொடக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா அதிரடியாக ஆடினார். ஆனால், டி20 தொடரில் சொதப்பிய கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் வெறும் 3 ரன்னில் வெளியேறி, ஏமாற்றினார். இதையடுத்து புஜாரா இறங்கினார். பிருத்வி ஷாவும் புஜாராவும் அடித்து ஆடினார். சிறப்பாக ஆடி கொண்டிருந்த பிருத்வி 11 பவுண்டரிகளுடன்  69 பந்துகளில் 66 ரன் எடுத்த நிலையில் பாலின்ஸ் வீசிய பந்தில் போல்டானார்.

இதையடுத்து கேப்டன் விராத் கோலி களமிறங்கினார். மதிய உணவு இடைவேளை வரை, 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 169 ரன் எடுத்தி ருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் 54 ரன்கள் எடுத்திருந்த  புஜாரா, ராபின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் துணை கேப்ட ன்  ரஹானே வந்தார். அவரும் விராத் கோலியும் ஆடி வந்தனர். அபாரமாக ஆடிய விராத் கோலி அரை சதம் அடித்தார். தொடர்ந்து அடித்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானே 11 ரன்களுடனும் விஹாரியும் ஆடி வருகின்றனர். 8.20 மணி நிலவரப்படி இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close