[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

யார் பலசாலி ? இந்தியாவா ஆஸியா ? இன்று தொடங்குகிறது முதல் டி20

india-plays-against-on-there-first-tour-match-against-aussies-today-at-brisbane

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 தொடர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் ஆஸி அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால். டி20 போட்டிகளில் நாங்கள்தான் சிறப்பாக விளையாடும் அணி என்று ஆஸி கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார். முக்கியமாக அந்த அணியின் தூண்களான வார்னர், ஸ்மித் இல்லாதது ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவுடன் உள்ளூரில் நடைபெற்ற ஒரு நாள் தொடர் மற்றும் டி20 ஆட்டத்தில் ஆஸி.தோல்வியடைந்தது. ஆஸியை பொறுத்தவரை பேட்டிங்கில் ஆரோன் பின்ச், கிளென் மேக்ஸ்வெல், கிறிஸ் லீன், ஆர்சி ஷார்ட், ஆகியோரை முழுமையாக நம்பி இருக்கிறது. ஐசிசி தரவரிசையில் ஆரோன் பின்ச் பேட்டிங்கில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முன்பிறுந்த ஆஸி அணியின் பவுலிங் இப்போது இல்லை என்றாலும் நைல், டை, ஸாம்பா ஆகியோர் ஓரளவுக்கு எதிரணியை மிரட்டக் கூடியவர்.

ஆனால் இந்திய அணி பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இரண்டிலும் வலுவான அணியாகவே இருக்கிறது. கோலி, ரோகித், ராகுல் பேட்டிங்கில் களக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, கலீல் அகமது, சஹால், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் போன்றவர்களால் வலுவாக உள்ளது இருக்கிறது. ஆஸி அணியுடனான போட்டி என்றாலே வார்த்தை தகராறு சகஜம்தான். இது குறித்து பேட்டியளித்த விராட் கோலி "எங்களை சீண்டினாலும் அதற்கேற்ற பதிலடி கொடுப்போம்" என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தொடர்ந்த கோலி "வம்புச் சண்டை என்பது ஆடுகளத்தில் சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை பொருத்துதான் அமையும். எதிர் தரப்பினர் உங்களிடம் வம்புச் சண்டைக்கு வந்தால், அதற்கு நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும். இந்திய அணி வம்புச் சண்டைகளை இழுக்கும் அணி கிடையாது. நம்முடைய சுயமரியாதைக்கு என்று ஒரு அளவுகோல் உள்ளது. அந்த எல்லையை யாராவது தாண்டினால், நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.என்னை பொருத்தவரை ஆக்ரோஷம் என்பது வெற்றி பெருவதற்காக விளையாடுவது. ஒருவித கருத்துவெறி. அது ஒவ்வொரு பந்தினையும் என்னுடைய அணியின் வெற்றிக்கானதாக மாற்ற வேண்டும்" என கூறியுள்ளார். 

இதேபோல ஆஸி கேப்டன் அரோன் ஃபின்ச் செய்தியாளர்களை சந்தித்தபோது " டி20 போட்டிகளில் நாங்கள் சிறந்த அணி. ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு  தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றோம். எனவே நாங்கள் நிச்சயமாக வெற்றிப் பெறுவோம் என உறுதியாக இருக்கிறோம். இந்தியா மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ரொம்ப காலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால் இந்தியாவுடனான எங்கள் அணி முழு பலத்துடன் ஆக்ரோஷத்துடனேயே விளையாடும். எனவே இந்திய அணியால் எங்களை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது. ஏனென்றால் டி20 போட்டிகளில் நாங்கள் பலமானவர்கள்" என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close