[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை ஊதித்தள்ளியது பாகிஸ்தான்!

pakistan-overpower-hong-kong-to-open-asia-cup-campaign

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்ற பெற்றது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றுமுன் தினம் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்றுமுன் தினம் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ் அணி வென்றது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின.

Read Also -> விராத் கோலி ஆப்சென்டால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்: பிசிசிஐ காட்டம்! 

Read Also -> கரிபியன் லீக் தொடர்: 3-வது முறையாக கோப்பையை வென்றது பிராவோ அணி

டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி 37.1 ஓவரில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஐசாஸ் கான் 27 ரன்களும் கின்சிட் ஷா 26 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி, சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 50 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close