[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

'ஓம் பினிஷாய நமஹ' தோனியை கலாய்த்த சேவாக் ட்வீட்

happy-birthday-ms-dhoni-happy-birthday-papa-sings-ziva-dhoni-as-wishes-pour-in-for-msd

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 37 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இப்போது இங்கிலாந்தில், இந்தியக் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் தனது பிறந்தநாளை சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் தோனி கேக் வெட்டி கொண்டாடினார். இதில் தோனியின் மகள் "ஹாப்பி பர்த்டே அப்பா" பாட, மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டினார் தோனி.

தோனியின் பிறந்தநாளுக்கு சக கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் வீரர்களும் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கேக் வெட்டி முடித்ததும், சக வீரர்கள் தோனியின் முகத்தில் கேக்கை பூசி தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் லிஜெண்ட் தோனி. உங்களை போல் யாரும் இல்லை" என பதிவிட்டிருந்தார்.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி, 500 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியை விளையாடியதற்கு வாழ்த்துகள். இதே போல இப்போதும் எப்போதும் நீங்களும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

தோனிக்கு கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துகளில் சிறப்பானது விரேந்தி சேவாக் பதிவிட்டிருந்த ட்வீட்தான். கடந்த 2017-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டை எப்படி தற்காத்துக்கொண்டு அணிக்கு வெற்றித் தேடித்தந்தார் தோனி என்பதைக் குறிப்பிட்டு வீரேந்திர சேவாக் ட்விட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் சேவாக் ‘‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி, இந்தப் போட்டியில் நீங்கள் விக்கெட்டை கால்களை நீ்ட்டி பாதுகாத்தது போல் உங்களின் கிரிக்கெட் வாழ்கை வெகு காலத்துக்கு இருக்க வேண்டும். உங்களின் மகிழ்ச்சி நீங்கள் செய்யும் ஸ்டெம்பிங்கை விட அனைத்து விஷயங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஓம் பினிஷாய நமஹ’’ என சேவாக்குக்கு உரிய நய்யாண்டியுடன் வாழ்த்தியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close