[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் டி வில்லியர்ஸ்

ab-de-villiers-south-africa-batsman-retires-from-international-cricket

தென்னாப்ரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்ரிக்க அணியில் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் சிறந்த வீரர்களுள் ஒருவர் ஏபி டி வில்லியர்ஸ். இவரை ரசிகர்கள் புனைப்பெயராக மிஸ்டர் 360 என்று அழைப்பார்கள். அது ஏன் எனில், 360 டிகிரி கோணங்களில் பந்தை சிதறடிப்பார் என்பதால் தான். இவர் ஆடும் போதும் பந்துவீச்சாளர்கள் எந்தப் பக்கம் பந்தை வீசுவது எனது குழம்பிப் போவார்கள். ஏனெனில் வலது பேட்டை பிடித்துக்கொண்டு நிற்கும் வில்லியர்ஸ், பந்துவீச்சாளர் ஓடி வந்துகொண்டிருக்கும் போது திடீரென இடது, வலது என மாறி மாறி திரும்புவார். அப்போது எந்தத் திசையில் பந்து வருகிறதோ, அதே திசையில் பந்தை அடித்து பறக்கவிடுவார். 

2004ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிராக தென்னாப்ரிக்க அணி விளையாடிய டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் அறிமுகமானர் டி வில்லியர்ஸ். 17ஆம் தேதி அறிமுகமான இவரது, ஜெர்ஸி எண்ணும் 17 தான். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இன்னும் கூட இவரது ஆட்டத்தில் அதிரடி குறையவில்லை. கிரிக்கெட் உலகில் சச்சின், கங்குலி, தோனி, லாரா, ஜெயசூர்யா, கில்கிரிஸ்ட் ஆகியோருக்கு எப்படி தனி ரசிகர் கூட்டம் உள்ளதோ, அதேபோன்று டி வில்லியர்ஸ்-க்கும் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது இவர் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close