[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

கோபத்தில் பொங்கிய வார்னர்: டி காக்குடன் கடும் வாய்ச்சண்டை

australia-vs-south-africa-video-of-dave-warner-quinton-de-kock-exchange-emerges

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தென்னாப்பிரிக்கா வீரர் குயிண்டன் டி காக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், டர்பன் நகரில் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது. இருப்பினும், டி காக், மார்க்ரம் கூட்டணியின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் பக்கம் வெற்றி திரும்பும் அளவிற்கு சென்றது. 

ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் முதல் இன்னிங்சில் தலா 351, 162 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில்  227 ரன்களுக்கு ஆட்டமிழக்க 417 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி 49 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்தது. பின்னர் மார்க்ரம், டி காக் இணைந்து ஆஸ்திரேலியா அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதில் மார்க்ரம் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டி காக் இறுதிவரை போராடி 83 ரன்கள் எடுத்து 10வது விக்கெட்டுக்கு ஆட்டமிழந்தார். 298 ரன்களுக்கு தென்னாபிரிக்கா ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா வெற்றி ஒருவழியாக உறுதியானது.

இதனிடையே நான்காம் நாள் ஆட்டத்தின் போது, வார்னர், டி காக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் டிரெஸ்ஸிங் அறைக்கு செல்ல வீரர்கள் படியேறி வருகிறார்கள். படியில் வீரர்கள் ஏறிவரும் போது டி காக், வார்னர் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் திட்டிக் கொள்கின்றனர். இதில் வார்னர் மிகவும் ஆக்ரோஷமாக டி காக் மீது சீறி பாய முயற்சிக்கிறார். அவரை சக ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். அவர்களை மீறி சென்று வார்னர் சண்டையிட முயற்சிக்கிறார். பின்னர் டி காக் அமைதியாக நடந்து தனது அறைக்கு சென்றுவிடுகிறார். ஒரு வழியாக வார்னரை அவரது அறைக்கு சக வீரர்கள் அழைத்துச் செல்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

         

ஆஸ்திரேலியா அணி எளிதில் பெற வேண்டிய வெற்றியை இருவரும் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தினர். 4ம் நாள் ஆட்டத்தின் பெரும் பகுதியை மார்க்ரம், டி காக் ஆதிக்கம் செலுத்தினர். இதனால், ஆடுகளத்திலேயே வார்னர் ஆக்ரோஷமாக இருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே போட்டி நடுவர்கள் இருநாட்டு வீரர்களிடம் கிரிக்கெட் விளையாட்டின் நன்னடத்தை மான்பை மீறக்கூடாது என்பதை வழியுறுத்தியுள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close