[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

முதல் 6 ஓவர்கள்தான் டார்க்கெட்: சுரேஷ் ரெய்னா

need-to-take-chances-in-firs-6-overs-suresh-raina

முதல் ஆறு ஓவர்களில் ரன்கள் குவித்தால் கண்டிப்பாக வெற்றிபெற்றுவிடலாம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறினார்.

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டி என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

இந்நிலையில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறும்போது, ’கடந்த இரண்டு போட்டிகளில் நான் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் விராத் கோலி என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளிலும் முதல் ஆறு ஓவர்களில் நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். அதிக ரன்கள் குவித்திருப்போம். அந்த ஓவர்களில் நாம் ஆதிக்கம் செலுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். சில நேரம் அந்த ஓவர்களில் அதிக ரன்கள் கிடைக்கலாம். சில நேரம் கிடைக்காமல் போகலாம். மிடில் ஆர்டரும் சிறப்பாக விளையாடினால் அதிக ரன்கள் குவிக்க முடியும். 

ஒவ்வொரு போட்டியுமே முக்கியமான ஒன்றுதான். இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் ஆவலில் இருக்கிறோம். விராத் கோலி அணியை சரியாக வழிநடத்திச் செல்கிறார். தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இருக்கிறது. வீரர்களின் அறையில் எல்லோருமே அந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். நமது பந்துவீச்சும் சிறப்பாக இருக்கிறது. எந்த வரிசையில் இறங்கினாலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும். ஒவ்வொரு போட்டியிலும்  எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close