[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

பாக்.கை பந்தாடியது இந்தியா: ’டிராவிட் ஆர்மி’க்கு குவியும் வாழ்த்துகள்!

congrats-dravid-army-twitter-goes-into-meltdown-after-india-s-victory-against-pak

ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வென்று இறுதி போட்டிக்குச் சென்றுள்ள இந்திய ஜூனியர் டீமுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. அரையிறுதி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொண்டு ஆடியது. இந்திய அணி 272-க்கு ஆல் அவுட் ஆனது. 
சுப்மன் கில் அபார சதமடித்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 29.3 ஓவர்களில் 69 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் இஷான் பொரேல், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சதமடித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையடுத்து இறுதி போட்டிக்குச் சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வரும் 3-ம் தேதி சந்திக்கிறது.

இந்நிலையில் இந்திய ஜூனியர் டீமுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ‘பாகிஸ்தானின் இளம் வீரர்கள் தங்கள் முன்னோர் சுவடுகளை பின்பற்றியுள்ளனர்’ என்று கூறியுள்ளார். வீரேந்திர சேவாக், ’சிறப்பாக ஆடியுள்ளீர்கள். இறுதி போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

பிரசாந்த் என்பவர், ‘ஆர்ப்பாட்டம், ஆக்ரோஷம் எதுவுமில்லாமல், சைலண்ட் கில்லராக இந்திய அணி வெற்றிபெற்றிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வாரிய செயல்தலைவர் சிகே கண்ணா, ‘பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அவர் டீமுக்கு வாழ்த்துகள். அவர்கள் கண்டிப்பாக கோப்பையுடன் திரும்புவார்கள்’ என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இவர்களைப் போல ஏராளமான ரசிகர்களும் இந்திய ஜூனியர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close