[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

இன்று தொடங்குகிறது கோடிகள் விளையாடும் ஐபிஎல் ஏலம்!

ipl-auction-today

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது.

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் சார்பில் 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும் அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். இதனால் மற்ற வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கிறது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப் பட்டியலில் உள்ளனர். 

சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் வீதமும், சர்வதேச போட்டிகளில் ஆடாதவர்களுக்கு ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் என்ற வீதமும் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 36 வீரர்களின் தொடக்க விலை 2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜ்சிங், அஸ்வின், ரஹானே, தவான், கவுதம் கம்பீர், ஹர்பஜன்சிங் (இந்திய வீரர்கள்), பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் (இங்கிலாந்து), மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல், பொல்லார்ட், பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஷகிப் அல்-ஹசன் (பங்களாதேஷ்), டு பிளிசிஸ் (தென்னாப்பிரிக்கா) ஆகிய 16 வீரர்கள் முத்திரை வீரர்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதலில் இவர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள்.  இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் மேட்லி ஏலத்தை நடத்துகிறார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close