[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

தப்பிய கோலி, கத்திய ரபாடா!

virat-kohli-dropped-on-11-and-32

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, நேற்று இரண்டு முறை அவுட்டில் இருந்து இருந்து தப்பினார்

தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு சுருண்டது. 
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களான ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், முரளி விஜய் 8 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். புஜாரா 50 ரன்களிலும், கேப்டன் கோலி 54 ரன்களிலும் வெளியேறினார். ர‌ஹானே 9 ரன்களிலும், பார்த்திவ் படேல் 2 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். புவனேஷ்வர் குமார் 30 ரன்கள் எடுத்தார்.

வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் என்பதால் இந்திய அணி திணறியது. விராத் கோலி 11 ரன் எடுத்திருந்த போது, ரபாடா வீசிய பந்தை தூக்கி அடிக்க, அது உயரத்தில் பறந்தது. அந்த எளிய கேட்சை பிலாண்டர் நழுவ விட்டுவிட்டார். கடுப்பான ரபாடா மைதானத்தில் குத்த வைத்து கத்தித் தீர்த்துவிட்டார். அந்த கேட்சை பிடித்திருந்தால் இந்திய அணி இன்னும் குறைவான ரன்களில் சுருண்டிருக்கும். அதே போல, விராத் 32 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, வழங்கிய கேட்சை, ஸ்லிப்பில் நின்ற டிவில்லியர்ஸ் தவற விட்டார். 
மறுபடியும் தப்பிய அவர், ஸ்கோர் 97 ரன்களை எட்டிய போது, நிகிடி வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்றார். ஆனால், பந்து, பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நின்ற டிவில்லியர்சிடம் சென்றது. இந்த முறை அந்த கேட்சை சரியாக பிடித்தார் வில்லியர்ஸ். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close