[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

கோலிக்கு ஆதரவாக கவாஸ்கர் கருத்து: பிசிசிஐ-க்கு அறிவுறுத்தல்

sunil-gavaskars-wake-up-call-for-cricket-board-after-virat-kohlis-complaint

தென் ஆப்பிரிக்க தொடருக்கு தயாராவதற்கு போதுமான நேரம் இல்லை என்ற விராட் கோலியின் கருத்துக்கு சுனில் கவாஸ்கரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடர் வரும்  டிசம்பர் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த தொடர் முடிந்த 4 தினங்களில்( டிசம்பர் 28-ஆம் தேதி)  தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்நிலையில் வலுவான நிலையில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுவற்கு ஏற்ப, இந்திய அணி தயாராக போதுமான காலஅவகாசம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விராட் கோலிக்கு சாதகமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, " கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின், கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மணன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பது மட்டுமே வேலை என கருதுகிறார்கள். அதற்கு அப்பாற்பட்டு, அணியின் நிர்வாக விஷயங்களிலும் அவர்கள் ஈடுபட வேண்டும். தென் ஆப்பிரிக்காவுடன் போடப்பட்ட போட்டி அட்டவணை பற்றி இனிமேல் விவாதித்தோ, குறை சொல்லியோ ஒன்றும் ஆகப்போவதில்லை. தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பின்னாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட
அணிகளுடன் இந்தியா விளையாட உள்ளது. எனவே அத்தகைய போட்டிகளுக்கான அட்டவணையை தயார் செய்யும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கவனத்துடன் செயல்பட வேண்டும்" என்றார்.

இந்திய அணி பயிற்சிக்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை என்ற விராட் கோலியின் கருத்துக்கு கங்குலியும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close