[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

மகராஷ்டிராவில் இருந்து இடம்மாறும் ஐபிஎல் போட்டிகள்

ipl-9-no-matches-in-maharashtra-after-april-30-bombay-hc-orders-bcci

மகராஷ்டிரா மாநிலத்தில் வரும் 30-க்குப் பிறகு நடத்தப் திட்டமிட்டிருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றும்படி மும்பை உயர்நீதிமன்றம் பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும்வறட்சி நிலவுவதால், மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பிசிசிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், மைதானப் பராமரிப்புக்காக குடிநீர் பயன்படுத்தப்படாது என்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

மேலும், வறட்சி நிவாரணப் பணிகளுக்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே ஆகிய அணிகள் தலா ரூ.5 கோடி ரூபாய் கொடுப்பதாகவும், வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாரத்வாடா பகுதிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 64 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த மும்பை உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30-க்குப் பிறகு மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. இதனால், மே 29-ல் மும்பையில் நடைபெற இருந்த இறுதிப் போட்டி உள்பட 13 போட்டிகளை இடமாற்றம் செய்ய பிசிசிஐ-க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close