[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

சச்சின் சாதனை: முறியடித்தார் கோலி

virat-kohli-surpasses-sachin-tendulkar-s-points

ஐசிசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை விராத் கோலி படைத்துள்ளார். அவர் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் ஒருநாள் தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து பெற்ற 7வது தொடர் வெற்றியாகும். இத்தொடரில் இந்திய கேப்டன் விராத் கோலி ரன் மெஷினாக செயல்பட்டார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில்  முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
899 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ள விராத், ஐசிசியின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், 1988ஆம் ஆண்டில் 887 புள்ளிகள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது. இதை கோலி முறியடித்துள்ளார்.
இத்தொடரில் பந்துவீச்சில் கலக்கிய பும்ரா, ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close