[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஆஸி.யுடன் டி20: ரஹானே அவுட், நெஹ்ரா, கார்த்திக் சேர்ப்பு

nehra-karthik-recalled-for-t20

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆசிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 4க்கு 1என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து மூன்று டி20 போட்டிகளில் இரு அணிகளும் ஆடுகின்றன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ரஹானே நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்காமல் இருந்த ஷிகர் தவான், அணிக்கு திரும்பியுள்ளார்.

அணி விவரம்:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தவான், ராகுல், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட்), பாண்ட்யா, குல்தீப், சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார், நெஹ்ரா, அக்‌ஷர் படேல்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 7 ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close