[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
 • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
 • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
 • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
 • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
 • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
விளையாட்டு 24 Sep, 2017 07:42 AM

சச்சின் அட்வைஸ் உதவுகிறது: ரஹானே

i-like-to-stay-in-the-present-rahane

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தூரில் நடைபெறும் இந்தப்போட்டி மதியம் ஒன்றரை மணயளவில் தொடங்குகிறது. முதல் 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ள இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், அடுத்தப் போட்டிகளில் களமிறங்கி விடுவார். இதனால் ரஹானேவின் இடம் கேள்விக்குறியாக உள்ளது. 

இதுபற்றி  ரஹானேவிடம் கேட்டபோது, ’என் எதிர்காலம் பற்றி நான் அதிகமாக யோசிப்பதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். தவான் வந்த பிறகு என்ன நடக்கும் என்பது பற்றி தெரியாது. அதனால் இப்போதைய நிலை எனக்கு முக்கியம். அதனால் இன்றைய போட்டியில் எப்படி ஆட வேண்டும் என்பதுபற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தேன். அவர்,  ‘வாய்ப்புகள் சில நேரம் வரும். சில நேரம் வராது. அது உன் கையில் இல்லை. ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு மனரீதியாக தயாராக வேண்டும்’  என்றார். அவர் பேட்டிங் டெக்னிக் பற்றி அதிகம் பேசவில்லை. அவர் பேசியதெல்லாம் மனரீதியாக எப்படி தயாராக வேண்டும் என்பதைதான். அதைதான் நான் கடைபிடித்துவருகிறேன். அவர் சொன்னது எனக்கு உதவியாக இருக்கிறது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close